Thursday, May 20, 2010
காலாவதியான உணவு
நாம் வெளியில் வாங்கி உண்ணும் உணவுப் பொருட்களில் பெரும்பான்மையானவை காலாவதியான உணவு என்பது கடந்த வாரம் மாநிலம் முழுவதும் நடந்த ரெய்டி; தெரியவந்திருக்கிறது. காலாவதி மருந்து மோசடி போலவே இந்த மோசடியையும் கவனிக்காமல் இத்தனை நாட்களாக தூங்கிக் கொண்டிருந்த பொருள் வழங்கல், சுகாதாரம் ஆகிய துறைச்சார்ந்த அதிகாரிகள் மீதுதான் முதலில் நடவடிக்கை பாய வேண்டும். நகரம் தொடங்கி கிராமங்கள் வரை உணவகம், பேக்கரி, டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர், குடோன்கள் என பல நிறுவனங்கள் இப்போது சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.ஆனால் இந்த துறைகளின் அதிரடி செயல்பாடுகள் பயன் தருமா என்ற கள்வி எழுகிறது. ஏனென்றால் நடத்தப்படும் சோதனைகளின் மீது வழக்கு தொடுக்கப்படும் சதவீதம் மிகவும் குறைவு. அதே சமயம் தண்டனை பெறும் நிறுவனங்களும் மிகமிகக்குறைவு. உணவுப் பொருட்களில் கலப்படம் மற்றும் காலாவதி தொடர்பான வழக்குகளில் 99 சதம் தண்டனையில் இருந்து தப்பிக்கொள்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ரிலயன்ஸ் கடைகளிலும் இந்த பொருட்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதாக தெரிகிறது. அரசியல் தலையீடு, பணவிளையாட்டு ஆகியவற்றைத் தாண்டி இந்தச் சோதனைகள் வெறும் மீடியா ரிப்போர்ட்டாக முடிந்துவிடாமல் இருக்க வேண்டும்.
Sunday, May 16, 2010
அட்சய திரிதியை
அட்சய திரிதியை என்ற சமீபத்தில் அதிகமாக நகைக்கடைக்காரர்களால் விமர்சனம் செய்யப்பட்டு தற்போது இந்நாளில் நகை வாங்கினாத்தான் வருசம் முழுவதும் வசந்தம் வீசும் என்று மக்கள் மூடநம்பிக்கைக்கு போய்யுள்ளனர். இன்று தான் ஆதிசங்கரர் அழுகிய நெல்லிக்கனியை தந்த பெண்மணியின் வறுமையை பார்த்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். இதே நாளில் தான் குசேலனின் அவலை கிருஷ்ணபகவான் வாயில் போட போட குசேனனின் வீடு பொன்னும் பொருளுமாக நிறைந்ததாம். ஆனால் உண்மையில் இந்தநாளில் தான் நாம் தானம் செய்ய வேண்டும் இது தான் உண்மை.
Saturday, April 24, 2010

மருத்துக கவுன்சிலிங் தலைவர் கேசன் தேசாய் 1800 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருப்பதும், ஒன்னரை டன் தங்கம் அவரது வீடுகளில் இருப்பதும் செய்தி வந்த பிறகு ரஜினிக்காந்த நடித்த சிவாஜி திரைப்படம் தான் ஞாபகம் வருகிறது. ஒரு கல்லூரிக்கு 25 கோடியில் இருந்து 30 வரை. சரி இவரது வழக்கு எப்படி போகும். வாங்கிய லஞ்சங்களில் அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு லஞ்சம் தரப்படும். 5 வருடங்கள் கழித்து மக்களை இவரை சுத்தமாக மறந்து விடுவார்கள்.
Friday, April 23, 2010
ஹாய் மதன்-கேள்வி பதில்
ஒரு பூசாரி, ஒரு கவர்னர், ஒரு சாமியார் ஆகியோரைப் புரட்டிப்போட்ட செக்ஸ் ஊழல்... அரசியல்வாதியை மட்டும் 'பதம்' பார்க்காதது, ஏன்?
பூசாரியிடமும் சாமியாரிடமும் குறிப்பிட்ட விஷயங்களைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். ஆகவே, அவர்கள் அதனை மீறும்போது அதிர்ச்சி அடைகிறோம். கவர்னர் என்பவர் அநேகமாக ரிடையர் ஆன கிழம். அவர் இப்படிச் செய்யும்போது திகைக்கிறோம். அரசியல்வாதி இவர் களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர், அவர் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்கிற எண்ணம் (அல்லது எதிர்பார்ப்பு!) ஏற்கெனவே நம்மிடையே பரவலாக இருப்பதால், அது பெரிய நியூஸ் ஆவது இல்லை!
Wednesday, April 21, 2010
Monday, April 19, 2010
ஐபிஎல் கிரிக்கெட் மோசடி
1997 களில் பாஜக சொன்னது கிரிக்கெட் விளையாட்டை இந்தியா ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று. காரணம் சூதாடிகள் இன்னும் பணம் பண்ண வேண்டும் என்ற நோக்கில் மக்களை முட்டாளாக்குகின்றனர் என்று சொன்னது நடந்து விட்டது. பணக்கார தொழிலதிபர்கள் எப்படியாவது இன்னும் பணம் வேண்டும் என்ற பேராசையில் இந்த மோசடி வித்தைகளை செய்கிறார்கள். நாடும் திருந்தாது. நாட்டு மக்களும் திருந்தமாட்டார்கள்.
சித்திரை திருவிழா
மானாமதுரையில் இன்று இரண்டாம் நாள் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. குலாளர் சமுதாயத்தினர் இன்று நடத்துகிறார்கள். ஆனால் ஆற்றுக்குள் மணல் இல்லை
Subscribe to:
Posts (Atom)