Thursday, May 20, 2010

காலாவதியான உணவு

நாம் வெளியில் வாங்கி உண்ணும் உணவுப் பொருட்களில் பெரும்பான்மையானவை காலாவதியான உணவு என்பது கடந்த வாரம் மாநிலம் முழுவதும் நடந்த ரெய்டி; தெரியவந்திருக்கிறது. காலாவதி மருந்து மோசடி போலவே இந்த மோசடியையும் கவனிக்காமல் இத்தனை நாட்களாக தூங்கிக் கொண்டிருந்த பொருள் வழங்கல், சுகாதாரம் ஆகிய துறைச்சார்ந்த அதிகாரிகள் மீதுதான் முதலில் நடவடிக்கை பாய வேண்டும். நகரம் தொடங்கி கிராமங்கள் வரை உணவகம், பேக்கரி, டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர், குடோன்கள் என பல நிறுவனங்கள் இப்போது சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.ஆனால் இந்த துறைகளின் அதிரடி செயல்பாடுகள் பயன் தருமா என்ற கள்வி எழுகிறது. ஏனென்றால் நடத்தப்படும் சோதனைகளின் மீது வழக்கு தொடுக்கப்படும் சதவீதம் மிகவும் குறைவு. அதே சமயம் தண்டனை பெறும் நிறுவனங்களும் மிகமிகக்குறைவு. உணவுப் பொருட்களில் கலப்படம் மற்றும் காலாவதி தொடர்பான வழக்குகளில் 99 சதம் தண்டனையில் இருந்து தப்பிக்கொள்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ரிலயன்ஸ் கடைகளிலும் இந்த பொருட்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதாக தெரிகிறது. அரசியல் தலையீடு, பணவிளையாட்டு ஆகியவற்றைத் தாண்டி இந்தச் சோதனைகள் வெறும் மீடியா ரிப்போர்ட்டாக முடிந்துவிடாமல் இருக்க வேண்டும்.

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

Followers